www.tamilchatroom.net

tamilchatroom.net

Saturday, October 2, 2010

காதல் வகுப்பறைகள்

ஜன்னல் வெளிச்சத்தினூடே
உன் வெட்கம் தலை தூக்கி பார்த்தது..
விழிகளால் ஜாதகம் எழுதினாய் நீ..
வழிகள் அற்று வசிக்கிறேன்!!
உன் நேசிப்போடு தொடங்கிய
உறவு தொடர்ந்து என்னை தொடர வைத்தது!!

வாசலில் வரவேற்கும் வளைகரங்கள்..
மலர்களின் வாசனையில்
புதைந்து கிடக்கும் கூந்தல்..
விடுமுறை நாளிலும்
விவாதம் செய்யும் மனது..
உன் வீட்டு முகப்பில்
மறைந்து நிற்கும் நான்!!
என்ன செய்ய நான்..
இம்சிக்கிறாயே நீ..
இதற்கு எனை நீ துவம்சித்திருக்கலாம் !!

வாதங்கள் உன்னோடு முற்றினாலும்
பேதங்கள் மாறாது பேசத்தோன்றி
யாசித்தவனாதலால் - நீ
வாசித்த வாசகம்
மறைந்து போக
நேசித்த வாசகம்
நினைவில் நிற்க
காதல் வாசம்
கலந்தது மூச்சுக்காற்றோடு!!

பாதச்சுவடுகள் பதிந்த இடங்கள்
பழையன தேடச்சொல்லியது..
கரும்பலகையில் கைவிரல்கள்
வெள்ளைப்பேனாவால் வார்த்தை வடிக்க
வகுப்பறையில் நான் இன்னும் வசிக்கிறேன்!!!




 

Thursday, September 30, 2010

காதல் முயற்சிகள்

என் காதல் சொல்ல முயற்சிக்கிறேன்.. ஒவ்வொரு முறையும்
முயற்சி திருவினையாக்கும் என்பதுபோல
நிகழ்கிறது மீண்டும் மீண்டும்!!

நீ பார்ப்பதும்
பார்க்காமல் இருப்பதும்
ஏனோ புரியவில்லை!!
வெட்கங்களின் வாசல்
உன்னை அடைத்திருக்கிறதா?
சிறு புன்னகையாவது உதிர்க்கலாம்..

உன் கண்களில் காதல் இருக்கிறதா?
ஆராய்ச்சி செய்தே
ஆயுட்காலம் கரைக்கிறேன்..
உன் கண்களுக்குள்ளும் கரைகிறேன்!!
உடல் எடை குறைய வேண்டுமெனில்
காதல் செய்யலாம்!!

எங்கு ஒளித்திருக்கிறாய்
எனது காதலை..
உன் அங்கங்களோடு
மறைத்திருக்கிறாயோ ஆடைகளால்..
நல்லவேளை நீ வேற்று மதக்காரியில்லை
இல்லையெனில் முகத்தையும் மறைத்திருப்பாய்!!!

தெருமுனைகள் முடியும் வரை
திரும்பி பார்ப்பேன் - இல்லையெனில்
வரும்முனைகள் நோக்கியே
திரும்பி வருவேன்.. ஏனெனில்
உன் நினைவுகள் மாறி
ஒரு முறையாவது பார்ப்பாயா என...

உன்னிடம் பாவனைகள் இல்லையென்று
உடன்பட்ட  வேளையில்
தின்றுவிட்ட உன் பார்வைகள் - எனை
முறைததுச்  செல்லும்.. இமைக்குள்
இழுத்துச் செல்லும்!!!

ஆதலால்,
உரக்ககத்துவதாய் நினைத்து
கேட்டேவிட்டேன் உன்னிடம்..
காதல் இருக்கிறதா என்று..
உனக்கு கேட்டிருக்குமா எனத்தெரியவில்லை!!!

என் காதல் சொல்ல முயற்சிக்கிறேன்..
ஒவ்வொரு முறையும்
முயற்சி திருவினையாக்கும் என்பதுபோல
நிகழ்கிறது மீண்டும் மீண்டும்!!

 

Sunday, August 22, 2010

காதல் வந்திருக்கிறது.....

காதல் எனக்கு பிடிக்காது உனக்கும்  பிடிக்காதாம்..
அதனால்தான்
உன்னை எனக்கு பிடித்தது!!!

ஊர் திருவிழாவிற்கு
வர விரும்பாதவன் நான்..
இப்பொழுது வர முயற்சிக்கிறேன்
நீ முளைப்பாரி எடுக்கிறாயாம்!!

அப்பா திட்டியும் நிறுத்தவில்லை
புகை பிடித்தேன்..
இப்பொழுதெல்லாம் பிடிப்பதில்லை
புகைபிடித்தல் உனக்கு பிடிக்காதாம் !!

நண்பர்களோடு நகைத்தவன் நான்
நண்பர்கள் தவிர்த்து திகைக்கிறேன்
உன் தோழிகளோடு  நகைக்கையிலாவது
எனை பார்த்து நகைப்பாயா என !!

பூக்கள் பறிக்க யோசிப்பவன் நான்
பூக்கள் பறிக்க யாசிக்கிறேன் - நீ
பூக்களின் ரசிகையாம்!!!

பத்து நிமிட வரிசைஎன்றாலும்
பயந்து ஒதுங்குபவன் ..
பல மணிநேரங்கள்  காத்திருக்கிறேன் - உன்
சில நிமிட தரிசனத்துக்காய்!!

எத்தனை நாட்கள் என்னை
சித்தனாய் வைப்பாய் நீ!
இத்தனை நாட்கள்
எனவாவது சொல்..

அலம்பத்தவிக்கிற முகம் போல்
புலம்பித்தவிக்கிறேன் நான் - கலங்கிப்போனாலும் 
புழங்காமலே இருக்கும் என் மனதில் 
உழவு செய்கிறது உன் காதல்!!




 

Saturday, August 7, 2010

மொட்டாக என் காதல்

விட்டு விட நினைக்கிறேன் நான்
சிட்டு நீ விடுவதில்லை!!

தொட்டு பேச முடியாவிட்டாலும்
வட்டமடிக்கிறேன் உன் அழகில்!!
வெட்டி வைக்கும் உன் பார்வைகள்
கட்டி வைக்கின்றன என்னை!!

சொட்டுப்போல் உன் காதல்
நட்டு விட்ட மரமாய் நான்!!
திட்டு திட்டாய் உன் முகம்
கெட்டு போகுது என் மனம்!!

கட்டு கட்டாக உன் அன்பு
விட்டுப்போவதேனில்
பட்டுப்போகும் உடலில்
கட்டாக இருக்கிறது உன் உயிர்!!
மொட்டாகவே என் காதல்
கட்டிகொள்வாயா என்னை.........

விட்டு விட நினைக்கிறேன் நான்,
சிட்டு நீ விடுவதில்லை!!

Monday, August 2, 2010

பெ(வெ)ண் நிலா

உனக்கு முன்னர்
தோன்றியதால்
அது நிலா!!
இல்லையெனில்
அந்தப்பெயரினில்
வந்திருப்பாய்  உலா.

வான்மகளின்
மழையாட்டத்தில்
தத்தளிக்கும் வான் நிலா!!
மழையாட்டத்தில்
சேர்ந்தாடி
வட்டமிடுகிறது உன் மழலை நிலா.

அன்னையின் கைகளில்
நிலாசோறாக சேர்கிறது
ஒற்றை நிலா!!
அன்னம் உன் கண்களிலோ
தெரிகின்றன
ரெட்டை நிலா.

நீர் செல்லும்
வழியெல்லாம்
வழிந்தோடுகிறது நிலா!!
நீர் உன் மீது
வழிந்தோட வழிகிறது
உன் அழகின் நிலா.

மலர்கள் மலர
மகிழ்வாய் வரவேற்கிறது
மங்கள நிலா..
மலர்கள் சூடி
மகிழ்வாய் அரவணைக்கிறது
உன் கருந்திரள் நிலா!!

வட்டமாய் வந்து
வட்டத்தை
வழிமொழிகிறது நிலா..
வாட்டமாய் இருந்த எனை
வட்டமடிக்க வைத்தாய்
நீ காதல் திட்ட நிலா!!

உன் காதல் பெற
தேய்(ர்)ந்தும்
வ(த)ளர்ந்துமாகின்ற
என்னைபோலவே வெண்ணிலா..

உன் காதலில்
மீண்டு
மீண்டும் வரவைக்கிற
நீ பூமியின் பெண்ணிலா!!

பாரதி அண்ணாமலை
 

Tuesday, July 27, 2010

புரியாதது.... காதல்

நீ கொடுத்த
முத்தத்தின் ஈரமும்
நீ தர மறுத்த
முத்தத்தின் பாரமும்
என்னிடம் இன்னும் தீரவில்லை!!

நீ அழைத்து முடித்த
பெயரின் தொடர்ச்சியும்
நீ அழைக்க மறுத்த
என் பெயரும்
நான் இன்னும் மறக்கவில்லை!!

உன் புன்னகையில்
நான் பெற்ற இன்பமும்
நீ வெறுத்ததில்
நான் அடைந்த துன்பமும்
துளி இன்னும் குறையவில்லை!!

காதலை சொன்ன கணத்தில்
நான் எனை மறந்ததும்
நீ எனை மறந்தபின்
நான் உயிரை துறந்ததும்
ஏனோ இன்னும் புரியவில்லை!!

-பாரதி அண்ணாமலை. 

Monday, July 26, 2010

கிராமத்து தேவதாஸ்

கண்ணு கண்ணுனு எனை சொல்லி
கண்ணாக இருந்தவ நீ..
மென்னு தின்னு எனைக்கொஞ்சி
மண்ணோடு மக்கவச்சே!

முறுக்கு புலியாட்டம்
இறுக்கி திரிஞ்சவன் நான்..
சிறுக்கி உம்பாசத்துல
கிறுக்குப்பயலா ஆக்கிபுட்டே!

ஒத்த முத்தம் கேட்டதுக்கு
ஒரு மாசம் பேசலை நீ..
செத்துவிட தோணுதுன்னேன்
நித்தம் நித்தம் ஒன்னு தந்தே!

நாமுழுக்க பாக்கலேன்னா
அந்த நாள மறந்திருவேன்..
எந்த நாளும் பாப்பதில்லை
எனக்கு நாளே ஞாபகமில்லை!

உங்கப்பன் கவுரவத்தை
உசுரா நெனச்சதால..
உன்னை கொழச்சு  நீ
எம்மனச வரட்டியா தட்டிவச்சே!

வளத்தமுகம் மறக்கவச்சே
ஒன்முகத்த நெலைக்கவச்சே..
ஒன்ன நெனச்சதால
வேறமுகம் தேடலையே!

வேறமுகம் வேணுமின்னா
எங்க வைப்பேன்  என் உயிரை!!!
வேறமுகம் வேணுமின்னா
எங்க வைப்பேன் என் உயிரை!!!



-பாரதி அண்ணாமலை.

Sunday, July 25, 2010

தீராக் காதல்

யாருமில்லா வெற்றிடத்தில்
உன் விரல்கள்  பிடித்து
அமர்ந்திருக்கிறேன்....
காற்றின் மெல்லிய உரசலில்
கண்கள் அயர்ந்து
உறங்கிபோனாய் என் மடிமீது.
நானும் கூட !!!!
ஆழ்ந்த உறக்கத்தின்  இறுதியில்
விழித்தெழுகையில் அருகில் இல்லை நீ.

அட!!!!!
கல்லறையிலும் கூடவா கனவுகள் வரும்!!!!

Tuesday, July 20, 2010

நான்.......

உன் முத்தங்களையும்
உன் புன்னகைகளையும்
என்னால்
ஏற்றுகொள்ள முடியவில்லையெனில் 
நான் இறந்திருப்பேன்... 

இல்லையெனில்
வாழ்வேன் பிணமாக !!!!!!!!

Tuesday, July 6, 2010

Wednesday, June 9, 2010

மனசு..

சாலை விபத்துக்களில் பாதிக்கப்பட்டது
ஏதாவதொரு குழந்தைஎனில்
எதுவும் நேர்ந்துவிட கூடாதென
வேண்டிக் கொள்கிறது அம்மாவின் மனசு...

உன்னைப்போல் எதுவும் வேண்டாம்.....

உன் சிறுவயது புகைப்படங்களை பார்க்கையில் உன்னைப்போல்
ஒரு குழந்தை வேண்டுமென நினைத்திருந்தேன்..

உன் பருவ வயதின் செய்கைகளை
உன் தோழிகள் நினைவு படுத்துகையில்
உன்னைப்போல்
ஒரு தோழி வேண்டுமென நினைத்திருந்தேன்..

உன் திருமண வரவேற்பின்
காணொளியை காண்கையிலும்
அப்பாவின் மீதான அன்பை வெளிப்படுதியதிலும்
உன்னைப்போல்
ஒரு மனைவி வேண்டுமென நினைத்திருந்தேன்..

நான் தவறுகள் செய்யும்போது கண்டித்ததிலும்
மற்றவரிடத்தில் அதை மறைத்து வைக்கையிலும்
உன்னைப்போல்
ஒரு அம்மா என் குழந்தைக்கும் வேண்டுமென நினைத்திருந்தேன்..

நீ இறந்து போகும் தருவாயில் கூட
எனை கலங்காதே என்று சொல்லி புன்னகைக்கையில்
அம்மா...
உன்னைப்போல்
எதுவும் வேண்டாம்.!!!
நீயே வேண்டும் எனக்கு மீண்டும் அம்மாவாகவே.....

Thursday, June 3, 2010

அன்புள்ள தமிழர்களே,

அன்புள்ள தமிழர்களே,




நமது SIFCC ( South Indian Film Chamber of Commerce) இலங்கையின் தமிழின அழிப்பின் கொண்டாட்டமாக நடக்கும் IIFA விருது வழங்கும் நிகழ்வை புறக்கணித்ததோடு மட்டும் இல்லாமல் அந்த விழாவில் கலந்துகொள்ளும் பாலிவுட் திரை நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் படங்களுக்கு தென்னிந்தியாவில் தடை விதித்துள்ளது. இது தென்னிந்திய திரை உலகத்தினரின் மிகச்சிறந்த மனிதாபிமானத்தின் வெளிப்பாடு ஆகும்.

அவர்களை இந்த முடிவில் இருந்து பின்வாங்க செய்ய பல்வேறு மட்டத்தில் இருந்தும் அழுத்தங்கள் வரும். ஆகையால் உடனே நம் அனைவரும் SIFCC க்கு நம் ஆதரவை தெரிவித்து அவர்களின் இந்த நிலைபாட்டை வலுப்படுத்துவோம்.

SIFCC க்கு தந்திகள் வழியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் தமிழர்கள் தங்களின் பாராட்டுதல்களையும் ஆதரவையும் தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.



South India Film Chamber Of Commerce Association

Phone: Home(044) 28291507

Address: 604-606, TR Sundaram Avenue, Anna Salai, Chennai- 600006, Tamil Nadu

Landmark: Near Rani Seeta Hall

Email: sifcc_08@bsnl.in2:33 am

Wednesday, June 2, 2010

Blogger Buzz: Blogger integrates with Amazon Associates

Blogger Buzz: Blogger integrates with Amazon Associates

நல்ல நேரம்...

புதிய வேலைகள் தொடங்குமுன்
நல்ல நேரம் பார்த்து செய் என்பாள் அம்மா..
நானும் அப்படித்தானே!!!!!!


என் காதலை
நீ வெட்கப்பட்ட கணத்தில் தானே சொன்னேன்.....
நீ என்னை காதலிக்க
எத்தனை முறை யோசித்தாயோ
தெரியவில்லை...


ஆனால் நான் உன்னை காதலிக்க
ஒரு முறை கூட யோசித்ததில்லை!!!!!!!!

Saturday, May 8, 2010

உன் காதல்

நானும் நீயும்
ஆயிரம் சந்திப்புகளில்
அறிமுகம் செய்துகொண்டோம்
வார்த்தைகளை மறந்தபடி.....
வாசகங்களை வாசித்து
கற்று கொண்டிருக்கிறாய் என்னோடு பேசுவதற்கு....!!!!!!

Saturday, May 1, 2010

மே தினம்

மே தினம்
மே 1 என்றால்
விடுமுறையென
மகிழ்ச்சியில் இருக்கிறது
பள்ளி செல்லும் குழந்தை.
மே 1 என்றால்
விடுமுறையென
துயரத்தில் இருக்கிறான்
மூட்டை தூக்கும் அப்பா..

Wednesday, April 28, 2010

காதல் = காமம் ....

காமம் விற்பனைக்கு என்கிற
அறிவிப்பு பலகை தவறென நினைப்பவன் நான்....
காதலும் விற்பனைக்குதான் என்று புரிந்து கொண்டேன்
நீ என்னை மறந்த பின்பு !!!!!!!...

--
பாரதி அண்ணாமலை.

பூக்களும் நீயும்

நீ பார்த்து விட்டு சென்ற பூக்கள்
தன்னைதானே சமாதானபடுத்தி கொள்கின்றன...
இந்த பிறவியின் பயனை அடைந்து விட்டதாய் !!!

நீ சூடி கொண்ட பூக்களோ
தன்னைதானே திட்டிகொள்கின்றன...
இந்த பிறவி ஏன் முடிகிறதென்று !!!!!!!!!!!!!!


--
பாரதி அண்ணாமலை

Thursday, March 4, 2010

தொலைந்துபோன என் புன்னகைகள்

உன் புன்னகைகள் இங்கு இல்லையெனில்

எங்கு தேடுவேன் என் வாழ்க்கையை ................

Monday, February 8, 2010

உன் பார்வை...

யாருமற்ற இரவில்
பனியின் துணையோடு அமர்ந்து இருக்கிறேன் நான் ......
உன் விரல்கள் என்னை தீண்டுவதாய் ஒரு உணர்வு .......


உன் தீண்டலில் குளிர்ந்துபோனது என் உடல்
பனியை விட அதிகமாய்........


உன் பார்வைகளின் வெப்பத்திலோ
கரைந்து போனது பனித்துளிகள்..
என்னோடு சேர்ந்து....!!!!


என்னை பார்த்து கொண்டே இரு காதலனே .....
இல்லையெனில் நான் மீண்டும் பனியாவேன்....!!!